மன்னார்குடி, நவம்பர் 07-
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி நகரக் கழகம் சார்பில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் தாயார் மற்றும் மது ஒழிப்பு போராளி மாரியம்மாளின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
மன்னார்குடி மதிமுக நகரச் செயலாளர் பி. பாலச்சக்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினர். பின்னர் அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மையார் மாரியம்மாளின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மதிமுக மாவட்ட அவைத்தலைவர் பி. ஜி. செங்குட்டுவன் முன்னிலையில், நகரச் செயலாளர் சண் சரவணன், நகர அவைத் தலைவர் கோ. வீரமணி, நகர துணைச் செயலாளர் பி. நாகராஜ், மாவட்ட பிரதிநிதிகள் மைக் பி. ராஜா, டி. வீராச்சாமி, மாவட்டச் செயலாளர் என். செல்லதுரை உள்ளிட்ட பலரும் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர்.
.jpg)
No comments:
Post a Comment